Main »
2009 » பங்குனி » 20 » எளிய தமிழில் PHP - 05
3:38 PM எளிய தமிழில் PHP - 05 |
PHP சரங்கள்
வணக்கம் அன்பு வாசகர்களே நேற்று PHP மாறியின் விதிகளை பார்த்தோம் இன்று PHP Strings (சரங்கள்) பற்றி பார்ப்போம் .
String variables are used for values that contains character strings.
String Variables என்பது மாறியை குறிக்கிறது, மாறியனது ஒரு எழுத்தோ , எண்களையோ வைத்திருக்கலாம்.
PHP சரத்தின் எடுத்துக்காட்டு :
$txt="Hello World"; echo $txt; ?>
இதன் வெளியீடு (Output) : Hello World
ஒரு சில PHP String Functions (சர செயல்கூறுகளை) பார்போம்
strlen() function
இந்த strlen() செயல்கூறு ஒரு சரத்தின்(String) நீளத்தை அளக்கும்.
எடு. கா நிரல்
echo strlen("Hello world"); ?>
இதன் வெளியீடு (Output) : 11
இதில்
HELLO WORLD என்ற வாசகத்தில் HELLO(5 வார்த்தைகளை கொண்டது ) World(5
வார்த்தைகளை கொண்டது ) ஆகா மொத்தம் 10 இதன் வெளியீடு (Output) மட்டும்
எப்படி 11 என்று வந்தது ? HELLO க்கும் WORLD க்கும் நடுவே ஒரு இடை வெளி
இருப்பதால் அதையும் ஒரு எழுத்தாக கணக்கு எடுத்துக்கொள்ளும் .
எப்படி இரு மாறியில் உள்ள வாசகங்களை ஒன்றாக இணைத்து அச்சிடுவது பற்றி பார்ப்போம்.
நாம் Hello World 1234 என்று அச்சிட வேண்டும் அதற்காக எப்படி நிரல் எழுவது ?
$txt1="Hello World"; $txt2="1234"; echo $txt1 . " " . $txt2; ?>
இதில் $txt1 & $txt2 என்ற இரண்டு மாறியிலும் தகவல்களாக இருக்கின்றன அவையை அப்படியே ஒன்றாக இணைத்து ஒரே வரியில் அச்சிட செய்ய echi $txt1." ".$txt2 என்று கொடுக்க வேண்டும்.
இங்கே
இரண்டு மாறியை இணைத்து அச்சிடுகையில் செய்கையில் புள்ளி . வைத்தால்
இரண்டும் ஒன்றாக இணைத்து அச்சிடும் நடுவில் " " என்ற (Double Quotes) இரு
மாறிக்கு நடுவில் ஒரு இடைவெளியை ஏற்படுதிக்றது.
இதனால் நமக்கு தேவையான வெளியீடை வர வைக்க முடியும்.
strpos() function
இந்த strpos() செயல்கூறு வாசகத்தில் இருக்கும் சரத்தை தேட அல்லது எழுத்தை கண்டுபிடிக்க உதவும்.
echo strpos("Hello world!","world"); ?>
ஒரு வாசகத்தில் இருக்கும் world என்ற சரத்தின் நிலைப்பாட்டைஅறிந்து கொள்ள strpos() என்ற செய்யற்கூரில் வாசகத்தையும் அதை தொடர்ந்து நடுவில் ஒரு கால் புள்ளி (comma), போட்டு சரத்தையும் கொடுத்தால் அதன் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும். |
Views: 683 |
Added by: m_linoj
| Rating: 0.0/0 |