Main » 
2009 » பங்குனி » 13 » இனியவளே…! [14]
|  | 
| 
				
			 தயவுசெய்து எனக்குமுன் கண்மூடிகடவுளை கும்பிடாதே உனை
 பிரிந்துவாழ பழகிக்கொண்டுவிடுவேன்
 *** என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டுஎதற்காக எதிர்கால உன் புருசனுக்காய்
 ரொம்ப நேரம் வேண்டுகிறாய்
 **** நவக்கிரகத்தை சுற்றி வந்தேன்உன்னை காணவேண்டுமென்று
 உன்னை சுற்றி வருகிறேன் நீ
 கிடைக்க வேண்டுமென்று
 **** பார் உன் வரவை அறியாதபக்தர்கள் எவ்வளவு பூக்களோடு
 வருகிறார்களென்று
 *** உனை கண்டவுடன் கண்மூடிகும்பிட பயமாக இருக்கிறது
 நீ காணாமல் போய்விடுவாயோ என
 **** நீயே சொல் உன்னை முன்னுக்குவைத்துக்கொண்டு எதை நான் வேண்ட
 முடியும் இறைவனிடம்
 **** நீ எதற்கு வேண்டுமென்றாலும்நேத்தி வைத்துக்கொள் தயவுசெய்து
 எதிர்ப்பின்றி நாம் சேரவேண்டுமென்று
 நேத்திவைக்காதே
 | 
| Views: 729 | 
Added by: m_linoj
 | Rating: 0.0/0 |