Main »
2009 » பங்குனி » 13 » இனியவளே…! [13]
|
உன்னை பார்க்க வேண்டாமென்று
சொல்லும் சமுதாயமே என்னை
பார்க்காததால் இன்னும் இன்னும்
உன்னை பார்க்க வைக்கிறது
*****
பெற்றோர்களை சுற்றி வந்தேன்
உலகறிந்த பிள்ளை என்றார்கள்
உன்னை சுற்றி வந்தேன் ஊரைவிட்டே
ஒதுக்கி வைத்தர்கள்
****
உன்னை நான் கை விட்டாலும்
என்னை நீ கை விடாதே
நம்பிக்கை இல்லாமல் என்னால
வாழமுடியாது
****
தனியா நடந்தால் பாதையெங்கும்
முள்ளாய் குத்துகிறது
உன் கூட நடந்தால் பூக்களாய்
வரவேற்கிறது
****
என்னை கண்ணாடியில் பார்த்தால்
என் இறந்தகாலம் தெரிகிறது
உன்னை நேரில் பார்த்தால்
என் எதிர்காலம் தெரிகிறது |
Views: 683 |
Added by: m_linoj
| Rating: 0.0/0 |