Main » 
2009 » பங்குனி » 13 » இனியவளே…! [12]
|  | 
| 
				
			 கோயிலுக்கு போனாலாவதுஉன்னை ஞாபகப்படுத்த எதுவும்
 இருக்காது என்றுதானிருந்தேன்
 ஏனோ என்னை கண்டதும் குருக்கள்
 உந்தன் பெயரில் உள்ள மந்திரத்தையே
 திரும்ப திரும்ப சொல்கிறார்
 ************ உன்னை சந்திக்க பேருந்தில்தான்வருகிறேன் ஏதோ நான் விமானத்தில்
 வருவது போல் இடுப்புபட்டியை தேடுகிறேன்
 ************** எனக்காக நீயும் உனக்காக நானும்விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான்
 இன்னும் பிரியாமல் கூட வருகிறது
 சமாதான புறாவாக நம் காதல்
 **************** உன்னை சந்திக்கும் போதுகருக்கொள்கிறது உன்னை
 பிரியும்போது கவிதையாய் பிறக்கிறது
 **************** தயவு செய்து என்னை கவிஞன்என்று உண்மை சொல்லாதே கிறுக்கன்
 என்று பொய் சொல்லிவிடு அது போதும்
 எனக்கு நான் பொய் சொல்லாதவன் என்று
 நீ நம்பிவிட
 ************* நிலையில்லாத வாழ்க்கையில் எதிலும்நிம்மதி இல்லமால் வாழ்ந்து வந்தேன்
 அனாதையாய் நானும் எங்கிருந்து
 வந்தாய் நீ என் நிம்மதியாகவும்
 என் ஆயிரம் உறவுகளின்
 சொந்தகாரியாகவும்
 | 
| Views: 696 | 
Added by: m_linoj
 | Rating: 0.0/0 |