Main » 
2009 » பங்குனி » 13 » இனியவளே…! [4]
|  | 
| 
				
			 இனியவளே… என் இறந்த காலம்மிக சோகமானது
 அதை மறக்க வைக்க
 இறைவன் கொடுத்த
 நிகழ்காலம்தான்
 நீ எனக்கு
 ********************************** நான்பொய் சொல்ல
 விரும்பவில்லை
 உன்னை ஞாபகப்படுத்தஉன் புகைப்படம் வேண்டாம்
 உன் புன்னகையும் வேண்டாம்
 உன் கவிதையும் வேண்டாம்
 ஏன் உன் நினைவும் வேண்டாம்
 உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டே
 இருக்க எதுவாலும் முடியாது
 உன்னைத்தவிர எனக்கு
 ********************************* இதுவரை நான் அசிங்கமானவன்என்று சந்தோசப்பட்டதில்லை
 நீ அழகானவன் என்று சொல்லும் வரை
 *********************************** நான் உன் கவிதையின் ரசிகன்அதனால்தான் சொல்கிறேன்
 இன்றே இறந்து போக தயார்
 அடுத்த நொடியே நான் உன்
 பேனாவாக பிறப்பேன் என்ற
 உறுதி மொழி கிடைக்குமென்றால்.
 | 
| Views: 691 | 
Added by: m_linoj
 | Rating: 0.0/0 |