Main »
2009 » பங்குனி » 11 » வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க
6:28 AM வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க |
நிறைய வலைத்தளங்களில் உள் நுழையவோ அல்லது சில கோப்புகளைத் தரவிறக்கம்
செய்யவோ சம்பந்தமே இல்லாமல் இலவச ரிஜிஸ்ட்ரேஷன் செய்யச் சொல்வார்கள்.
அதற்கும்
நமது முழு ஜாதகத்தையும் கேட்பார்கள். இதற்காக நமது முதன்மை மெயில் முகவரி
கொடுத்தால் அதில் நிறைய Spams விளம்பரங்கள் அனுப்பித் தொல்லை
கொடுப்பார்கள். இதற்காக போலி முகவரி ஒன்றை மெயிண்டெய்ன் பண்ண வேண்டி
வரும். இந்தத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க எளிதான வழி உள்ளது.
தள முகவரி: http://www.bugmenot.com/
தளத்தை உபயோகிக்கும் முறை 1. எந்தத் தளத்தை நீங்கள் திறக்க முயல்கிறீர்களோ, அந்த முகவரியைக் குறித்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக www.nytimes.com ) 2. bugmenot தளத்தை திறக்கவும். 3. அந்தத் தளத்தில் 1-ல் குறித்துக்கொண்ட முகவரியை கொடுத்து. "Get Logins" என்கிற பட்டனை அழுத்தவும். 4. இப்போது தங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட தளத்திற்குள் நுழைவதற்கு தேவையான User Name மற்றும் Password கிடைக்கும். இந்த
bugmenot இணைய தளம் ஸ்பாம் மடல்களிலிருந்து நாம் தப்பிப்பதற்கும், மேலும்
நிறைய நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் உதவும் வகையில் உள்ளது. அப்புறம் இந்தத் தளத்திற்குள் நுழைய ரிஜிஸ்ட்ரேஷன் எதுவும் கிடையாது. குழும
இணைய தளங்கள் (இணைய பக்கங்களை மாற்றிவிடும் உரிமை கொடுக்க ரிஜிஸ்ட்ரேஷன்
கேட்பது), பணம் கட்டி பார்க்கும் இணையதளங்கள் ஆகியவற்றை அவற்றின்
உரிமையாளர்கள் இந்த bugmenot இணைய தளத்துடன் தொடர்புகொண்டு தங்கள் தளத்தை
இதிலிருந்து பிளாக் பண்ணிக் கொள்ளலாம்
|
Views: 685 |
Added by: m_linoj
| Rating: 0.0/0 |