| சேவைகள் |
| CATEGORIES | |||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
Main » 2009 பங்குனி 8 » அதிசயக் காதல்!
3:09 PM அதிசயக் காதல்! | |
அடிக்கடி உன் முகத்தின் முகவரியை அசைபோட்டுக் கொள்கிறேன்! பார்ப்போர் எல்லோர் மீதும் பாசம் வருவதில்லை! கண்ணில் காண்போர் எல்லோர் மீதும் காதல் வருவதில்லை! ஆனால் எப்படி உன்மீது மட்டும் இப்படி ஒரு காதல்! என் இதயக் கோயிலில் காதல் வேதங்கள் ஓதப்பட… தென்றல் தெம்மாங்கு பாடி ஊருக்கு அஞ்சல் செய்கிறது! உன் வாசனைகள் எனைக் கடந்து செல்கிறது! ம்…! இதயத்தின் ஒவ்வொரு அறைகளிலும் உன் முகம் பதிகிறது! தாலாட்டும் பூங்காற்றாய் தழுவிச் செல்லும் உன் நினைவால்… என் அனுமதிகள் எதுவுமின்றி கற்பனை நான்கு திசைகளிலும் எட்டிப் பார்க்க… மௌனமாய் கருத்தரித்து விரல் வழி பிறந்து வழியும் கவிதைகளை விடிய விடிய எழுதி முடிக்கிறேன்! நெஞ்சினில் அன்பையும் கண்களில் காதலையும் உள்ளே தேக்கி வைத்து தளிர் விட்ட காதலை உன்னிடம் சொல்லி விட… கற்பனையாய் ஆயிரம் கவிதைகள்! கண்ணாடி முன் ஆயிரம் ஒத்திகைகள்! இருந்தும் என்ன பயன்…? உன்னைக் கண்டவுடன் உயிரெழுத்து எது மெய்யெழுத்து எது எதுவுமே தெரியவில்லை! எத்தனை மொழிகள் எனக்குத் தெரிந்திருந்தும் அத்தனை மொழியையும் மொத்தமாய் மறந்து ஒரு மொழியும் தெரியாத பிஞ்சுக் குழந்தையாய் நான்! ம்…! இது அதிசயக் காதல்தான்! | |
|
| |
| Total comments: 0 | |



