ஃப்ளாஷ் டிரைவே தேவையில்லை - நீதான் என்...
கோப்புப்பகிர்வான் தளங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோப்புகளையே பதிவு செய்திட இயலும். ஆனால் அந்தத் தளத்தின் வாயிலாக புதிய கோப்புகளை உருவாக்கிட வசதி இருக்காது.
அலுவலகக் கோப்புகளை உருவாக்கிட மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு எத்தனையோ வழிகளைப் பின்பற்றுகிறோம். ஒரு கணினியில் இருக்கும் கோப்புகளை வேறு கணினிக்கு மாற்றுவதற்கு ஃப்ளாஷ் டிரைவ்களையெல்லாம் பயன்படுத்துகிறோம்.
கோப்புப்பகிர்வான் தளங்களின் அடுத்த தலைமுறை வடிவம்தான் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ்.
இதன் சிறப்பம்சங்கள் :
1) கோப்புகளை எந்தக் கணினியிலும், எந்த உலவி வழியாகவும் பார்ப்பதற்கு இயலும்
2) Flash Drive தேவையின்றி, எந்தக்கோப்பு எங்கே தேவைப்படுகிறதோ அங்கே பயன்படுத்திக்கொள்ளலாம்.
3) பகிரப்பட்ட கோப்புகளின் பாதுகாப்புத்தன்மையை கடவுச்சொல்லின் மூலம் உறுதி செய்யலாம்.
4) உங்கள் கோப்புகளை அடுத்தவர் பார்க்கவோ, மாற்றியமைக்கவோ அனுமதி அளிக்கலாம் / மறுக்கலாம்.
5) ஒரு குறிப்பிட்ட கோப்பினை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மாற்றியமைக்கும் வசதியுண்டு.
6) ஆயிரக்கணக்கான கோப்புகளை ஒரே இடத்தில் பதிவுசெய்யும் வசதி
7) மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு வாயிலாக உருவாக்கப்பட்ட கோப்புகளை, வெறும் உலாவி வாயிலாகவே மாற்றியமைக்கவோ, கண்ணுறவோ வாய்ப்பளிக்கிறது.
தள முகவரி : http://workspace.officelive.com/
குறிப்பு :
இதற்காக நீங்கள் உங்களது லைவ் மின்னஞ்சல் வாயிலாக உள் நுழைந்திருத்தல் வேண்டும்.
கலைச்சொற்கள்
கோப்புப்பகிர்வான் - File Sharing
கோப்பு - File
மைக்ரோசாப்ட் ஆபீஸ் - Microsoft Office
ஃப்ளாஷ் டிரைவ் - Flash Drive
லைவ் - Live
உலவி - Browser
பகிரப்பட்ட கோப்புகள் - Shared Files
கடவுச்சொல் - Password
பார்க்க - Read
மாற்றியமைக்க - Edit
அனுமதி - Permission