சின்னதாய் ஒரு முயற்சி.
அட வேறு எதுவுமில்லை. தினமும் காலையிலே 6.00 மணிக்கு எழுந்துவிடவேண்டும். அவ்வளவுதான். சனியாவது, ஞாயிறாவது - எந்தக்கிழமையாக இருந்தாலும் காலை 6.00 மணிக்கு எழுந்துவிடவேண்டும். போய்யா உன் வேலையைப் பாத்துக்குட்டு அப்புடீங்கறியளா.
உங்களுக்காகத்தான் நான் இப்ப எழுதிக்கிட்டு இருக்கேன்.அது சரி.. 6.00 மணிக்கு எழுந்தபிறகு என்ன பண்ணுறது அப்புடின்னு கேக்குறவங்க இந்தப்பக்கம் வாங்க
அட 6.00 மணிக்கு எழுந்த பிறகு காலையிலே பல மேட்டர்கள் இருக்குங்க. சும்மா 10 மணி வரைக்கும் தூங்குறானே நண்பன் அவனை 10 நிமிடத்துக்கு ஒரு முறை எழுப்பலாம்ல. கண்டகண்ட ஓட்டல்களிலே சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறதுக்குப் பதிலா உங்கள் கையாலே சமைத்துப் பாருங்க. ஒரு வித்தியாசமா தெரிந்ததை வைத்து சமையல் முயற்சி பண்ணுங்க எண்ணி 10 நாளிலே உங்கள் சமையல் உங்களுக்கே ரொம்பப் பிடிக்கும்.
ஜிம்முக்குத்தான் போகமுடியவில்லை. இந்தப் பாழாப்போன சாப்ட்வேரு எழுதி எழுதி வயிறு பெருத்துத் தொப்பை விழுது. சும்மா தூங்குறதுக்கு பதிலா ஒரு குத்துப்பாட்டைப் போட்டு ஒரு குத்தாட்டம் போடுங்க. ஒரு அரை மணி நேரம் - (அப்படிப்போடு போடு ... பாட்டுக்கூட OK) ஆட்டம் ஆடிப்பாருங்க. 15 நாளு வெறித்தனமா இப்படி ஆடுனீங்கன்னா அப்புறம் இந்த ஆட்டம் உங்களுக்கே ரொம்பப்பிடிக்கும்.
உங்களுக்கு இங்கிலீஸ் நல்லா வராது என்று வைத்துக்கொண்டால் அதைத்தான் ஒரு சின்ன ஆடியோரெக்காடர் கருவியைக் கொண்டு - நீங்களே எதாவது நெட்டில் டவுன்லோடு பண்ணியதை வாசித்து - பேசிப்பதிவு செய்து தினமும் கேட்டுப்பாருங்க. எந்த இடத்திலே தவறு செய்கிறோம் அப்படிங்கறதை ஒரு அனலைஸ் பண்ணலாம். மறுபடி மறுபடி வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கேட்டு தப்பைத்திருத்திக்கோங்க. சரி.
எனக்கு இங்கிலீஸ் நல்லாவரும் அப்படிங்கறவங்க தூங்கப்போகிடாதீங்க. ஒரு வெளிமாநில மொழி / வேற்று தேச மொழியில் பரிச்சயம் ஆகுவதற்காக - அதை அரை மணி நேரம் பயிற்சி எடுக்கலாம்ல.
சாப்ட்வேருதான் கதின்னு இருக்குறவங்க - எதாவது ஒரு செர்ட்டிபிகேசன் கோர்ஸ் - செல்ப்ஸ்டடி - செய்து செர்ட்டிபிகிசேன் எழுதலாம்ல. போனவருசம் எழுதலாம்னு நினைச்சேன் - எழுத நேரம் இல்லை. இந்த வருசம் எழுதலாம்னு நினைக்கிறேன் - ஆனால் அதை பிரிப்பேர் பண்ண நேரமில்லை அப்படின்னு சப்பைக்கட்டுக் கட்டுரவங்கதானே நீங்கள் எல்லாம்.
6.00 மணிக்கு எழுந்தால் உங்களுக்கு 3.00 மணிநேரம் மிச்சமாகுதுல்லே. அதை சரியாகப் பயன்படுத்தலாம்ல. நைட்டு 1 மணிவரைக்கும் என்ன காரியத்துக்காக முழிக்கிறீங்க. எதாவது பிரயோசனம். வேலையை முடிச்சுட்டு இரவு 10.00 க்கு படார்னு தூக்கத்தைபோடுங்க. 6.00 மணிக்கு எழுந்துவிடுங்கள். சரி. எனக்கு இங்கிலீஸ் நல்லாவரும் ..
செர்ட்டிபிகேசன் பலதும் முடிச்சுட்டேன்.. தூங்கலாமேன்னு நினைக்குறீங்களா? அட - உங்களுக்கு கார் டிரைவிங்க் தெரியாதுல்ல. போங்க போகி முதல்காரியமா அதைக் கத்துக்கோங்க..
ஒரு ம்யூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட் வாசிக்கக் கத்துக்கலாம்ல. ஒரு ட்ரம்ஸ் வாங்கி காட்டுத்தனமா பிராக்டீஸ் பண்ணி உங்கள் கேள்-பிரண்டை அசத்தலாம்ல. இப்பப் பாரு பட்டையைக் கிளப்புறேன் அப்படின்னு ஒரு ரிதம் பார்ம் பண்ணி வாசிச்சுக்காட்டுங்க. அசத்துங்க.
88 கிலோ வெயிட்டு இருக்குது. ஆனால் 10.00 மணி வரை தூக்கம். வெள்ளிக்கிழமை ஆனால் தீர்த்தப் பார்ட்டி - இப்படியே இருந்தால் என்ன ஆவது. உடம்பு நீங்க சொன்னதை கேட்காது.. நீங்கள்தான் உடம்பு சொன்னதை கேட்கனும். கேவலமா இருக்குல்ல.
அட எல்லாம் பண்ணியாச்சு.. வேறு வேலை எதுவும் இல்லை.. அப்படின்னு ஏன் சொல்லுறீங்க.. உங்கள் பக்கத்துவீட்டுப் பசங்களுக்கு இலவசமா டியூசன் சொல்லித் தரலாம்ல.
சனி, ஞாயிறுகளில் எதாவது ஒரு சாப்ட்வேர் கோச்சிங்க் சென்டரிலே - வீக் எண்ட் கிளாஸ் எடுங்க. சம்பளம் குறைவாக இருக்குதுன்னு கவலைப் படாதீங்க. வெறும் தியரி கிளாஸ் மட்டும் எடுங்க.
சனி,ஞாயிறுகளில் மப்பு அடித்து முழுபோதையிலே இருக்கத்தான் வேண்டுமா என்ன? பொழுது போகவில்லைன்னா.. அட என்னை மாதிரி ஒரு பிலாக் ஓப்பன் பண்ணி - யாரும் படிப்பாங்க / படிக்கமாட்டாங்கன்ற கவலையில்லாமல் சும்மா காட்டுத்தனமா இப்படி- இதுமாதிரி எதையாவது எழுதிப் போஸ்ட்டாவது பண்ணலாம்ல.
அட சும்மாசொல்லலைங்க.. இவையெல்லாம் பொய்யில்லை. -- கண்ட உண்மை..