குழந்தைகளுக்கான இணைய உலவி
வயது வந்தோருக்கான எத்தனையோ மென்பொருட்கள் (software applications) இணைய உலகில் தினமும் வந்துகொண்டே இருக்கின்றன. இனியும் வரும்.
சிறார்களுக்கான - சுட்டிக்குழந்தைகளுக்கான (kids) மென்பொருட்களும் இணையத்தில் நாள்தோறும் வெளியிடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கு ஒரு நல்ல உதாரணம் : குழந்தைகளுக்கான இணைய உலவி (browser) [ KIDO'Z Browser ]
குழந்தைகள் - சுட்டிச்சிறார்கள் இணையத்தில் உலவும்பொழுது அவர்களுக்கே உரிய பாதுகாக்கப்பட்ட (Secured) அணுகுமுறையுடன் உலாவவே அனுமதிக்கப்படவேண்டும். இந்த KIDO'Z உலவியானது பாதுகாப்பு உணர்வைப் பலப்படுத்துகிறது.
சிறந்த தளங்கள், காணொளிகள், விளையாட்டுகள் போன்றவற்றுடன் நேரடியான இணைப்பை இந்த உலவி வழங்குகிறது.
வயதுவந்தோர் மட்டும் காணத்தக்க தளங்களை இந்த உலவி வடிகட்டிவிடுகிறது.(Filter) அனுமதி அளிக்கப்படாத தளங்களைக் குழந்தைகள் காண இயலாது.
விளையாட்டுகளும், காணொளிகளும் குழந்தைகளுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே இந்த உலவி பார்வையிட அனுமதிக்கும். இதை இயக்குவதற்கு அடோபியின் புதிய தொழில்நுட்பம் :Adobe Air தேவைப்படும்.
உலவியைத் தரவிறக்கம் (download) செய்ய உதவும் சுட்டி(link) கீழே :
http://kidoz.net/beta/index.html