பூமியில்
உள்ள பல்வேறு கூறுகளும் தமக்கென பிரேத்தியேகமான ஒலி எழுப்பும் இயல்பைக்
கொண்டிருப்பது போல விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களும் தமக்கெனப்
பிரேத்தியேகமான(நமது சூரியன் உட்பட) ஒலிகளை எழுப்புகின்றன என்று
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நட்சத்திரங்கள் எழுப்பும் ஒலிகள்
நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் அவற்றின் வயது, பருமன் மற்றும்
இரசாயனக்கட்டமைக்கள் குறித்து வேறுபடுகின்ற அதே நேரம்.. அவ்வொலிகள்
குறிப்பிடத்தக்க அளவுக்கு சீரான சந்த ஒழுங்கைக் காண்பிப்பனவாகவும்
இருக்கின்றன.
விண்வெளியில் சஞ்சரிக்கும், பிரான்ஸ் நாட்டின் கரொட்
விண்வெளி தொலைநோக்கியின் (Corot space telescope) உதவி கொண்டு விஞ்ஞானிகள்
நட்சத்திரங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலிகள் குறித்த தகவல்களைப்
பெற்றிருப்பதுடன் அவற்றை நாம் கேட்கக் கூடிய வகைக்கும் ஒலிப்பதிவு செய்து
கீழ் வரும் இணைப்பில் தந்துள்ளனர்.(நீங்களும் அவற்றை கீழ் உள்ள இணைப்பில்
அழுத்தி குறித்த இணையத்தளப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவுகளில்
கேட்கலாம்.)
இவ்வாறு நட்சத்திரங்கள் தமக்கெனப் பிரேத்தியமாக
எழுப்பும் ஒலியின் இயல்புகளைக் கொண்டு நட்சத்திரங்களில் நிகழும்
செயற்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்கள் பலவற்றை அறிவியல் ரீதியாக அணுகிக்
கண்டறிய வாய்ப்பிருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
மேலதிக தகவலும் நட்சத்திரங்கள் எழுப்பும் ஒலி வடிவங்களும் இங்கு.
|