டாக்ட
ர்
:
நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க
கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும்
கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"
JJJJJ
ஒருவர்:
என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன்
ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?
நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால,
முதல்ல அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான் நீங்க...!
JJJJJ
நோயாளி :
என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு
இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா
ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது
அந்தப்பொண்ணு!
JJJJJ
ஒருவர்:
இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன்
சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?
மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான்
சார்!