சனிக்கிரகத்தின் நிலாவில் நீர் நிரம்பிய குளம் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் பூமிக்கு அடுத்த படியாக வேறு ஒரு கிரகத்தின் தரைப்பரப்பில் நீர் இருப்பது தற்போதுதான் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஐரோப்பா இணைந்து கடந்த 2004-ல் சனிக்கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக "காசினி' என்ற விண்வெளி ஆய்வுக்கலத்தை அனுப்பியது.
இந்த விண்கலம் இதுவரை 3,500 கோடி கி.மீ. தொலைவு பயணம் செய்து புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதில் சனிக்கிரகத்தின் நிலாவான டைட்டனில் நீர் நிரம்பிய குளம் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், "டைட்டனில் திரவப் பொருள் நிரம்பிய பெரிய குளம் உள்ளது. எனினும் புகைப்படங்களை வைத்து அங்கு இருப்பது நீர் தான் என்று உறுதியாகக் கூறமுடியவில் லை. நீர் போல இருக்கும் வேறு திடப்பொருளாகவும் இருக்கலாம். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வில் முழு விவரமும் தெரியவரும்' என்று கூறியுள்ளது. டைட்டனின் தென் துருவப்பகுதியில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 7,800 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த குளம் அமைந்துள்ளது. |