சேவைகள் |
CATEGORIES | |||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
விடுகதைகள்-1
1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?
2. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?
3. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?
4. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?
5. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?
6.உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
7. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?
8.ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
விடைகள்:
1.வெங்காயம், 2. தபாற் பெட்டி, 3.தேங்காய், 4. சிலந்தி, 5. தண்ணீர், 6. அகப்பை, 7. மழை மேகம், 8. முட்டை.
விடுகதைகள்-2
1. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?
2. எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார்?
3. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?
4. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?
5. அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
6. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?
7. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
8. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்?
9. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?
விடைகள்:
1. தென்னைமரம்
2. நிலா
3. பென்சில்
4. அகப்பை
5. அப்பளம்
6. தீக்குச்சி
7. கண்ணீர்
8. அருவி
9. தொலைபேசி
10. செருப்பு
- தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?
- அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?
- அடத்தியான ஒரு மரத்துக்குப் பல கால்கள் அது என்ன?
- கறுத்த நீண்ட பாயின் மேலே வாகனம் ஓடுது அது என்ன?
- வலை பின்னும் ஆனால் அதனிடம் நூலில்லை அது என்ன?
- வாலால் நீர் குடிக்கும் வெளிச்சத்திலே தான் இருக்கும் அது என்ன?
- ஒற்றைக்கால் மனிதனுக்கு பல கைகள் அவன் யார்?
- வீட்டைச் சுற்றி கருவேலி அது என்ன?
- காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
- உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
10. கடல்
09. சாமரம்
08. கண்
07. மரம்
06. விளக்கு
05. சிலந்தி
04. பிரதான வீதி
03. ஆலமரம்
02. தபால்
01. தீக்குச்சி