மார்பகப் புற்று நோயின் மருத்துவம்,
கட்டியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை சாலையின் பரிசோதனை
முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயீன் தன்மையைப் பொறுத்தும்
அமையும் மருத்தும் என்பது தணிப்பட்டது அல்லது முழு உடல் சார்ந்தது
மார்பு பகுதிக்கு மட்டும் மருத்துவம்:-
ஒரு
குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழிததலோ
கட்டுபடுத்துதலோ இந்த வகை மருத்துவத்தின் தன்மையாகும். அறுவை மருத்துவம்,
அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட
மருத்துவமாகும்.
அறுவை மருத்துவம் அறுவை மருத்துவம் என்பது மார்பகக் புற்று நோய்க்கான மிகச் சாதாரணமான மருத்துவ முறையாகும்.
அறுவை மருத்துவத்தின் வகைகள்:-
அ. லம்பாக்டமி (Lumpectomy) இந்த
வகை அறுவை மருத்துவத்தில் மார்பகம் அப்படியே இருக்கும் மார்பகக்
கட்டியும், அதைச் சுற்றியுள்ள சாதாரண இழைமங்கள் சிலவும் அறுத்து
அகற்றப்படும்.
ஆ. மாஸ்டெக்லொமி (Mastectomy) இதில் பல வகைகள் உள்ளன. அவை யாவன.
சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy) இந்த முறையில் அக்குளிலுள்ள லிம்ப் நோட்களைச் சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி விட்டு மார்பகத்தை அறுத்து முழுதும் அகற்றப்படும்.
ரேடிகல் மாஸ்டெக்டமி:-
இந்த
முறையில் மார்பகம் முழுவதும் அக்குளுக்குரிய லிம்ப் நோட்களும் சிறிது
மார்பக சுற்று சதையும் அறத்து அகற்றப்படும். புற்றுநோய் மார்பக
சுற்றுச்சதையில் பரவியிருந்தால் மட்டுமே இந்த அறுவை நடத்தப்படும்.
பெரும்பாலான மாஸ்டெக்டமி நோயாளிகளுக்கு அந்த அறுவை மருத்துவத்தின் போதோ
அல்லது சில மாதங்களுக்குப் பிறகோ மார்பக மீட்டுரு வாக்கம் (re constriction) செய்யப்படும்.
மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி (Modified)
இந்த
முறையில் மார்பகமும் கை அக்குளின் கீழுள்ள சில லிம்ப் நோட்களும் அறுத்து
அகற்றப் படும். மார்பு சைதைகளும், அப்படியே பத்திரமாக விட்டு வைக்கப்
படுவதால் மார்பகச் சுவற்று வெளித் தோற்றமும், கையின் ஆற்றலும் பாதிக்கப்
படாது. எளிதில் சீராகி விடும். இதுதான் தரமான மாஸ்டெக்டமி முறையாகும்.
இதில் அக்குளின் கீழுள்ள லிம்ப் நோட்கள் அகற்றுவதுடன் கூடிய சாதாரண
மாஸ்டெக்டமியும் அடங்கும்.
கதிர்பாய்ச்சு மருத்துவ முறை (Radiation thoraphy) ரேடியேஷன்
தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை
அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப்
பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ
பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப்
பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (External rerdiction) என்று கூறப்படும்.
சிஸ்டமிக் டிரீட்மெண்ட்:-
உடலமைப்பு முழுதும் சார்ந்த இந்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்.
1. கீமோ தெரபி புற்று
அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது
வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். இம்மருந்துகளின் வாய் வழியாகவோ,
ஊசியின் மூலமோ தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ
முறையாகும். ஏனென்றால் தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல்
முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ
காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு
ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்.
2. ஹார்மோனல் தெரபி புற்றுநோய்
அணுக்கள் தாங்கள் வளர தேவையான ஹார்மோன்களிடமிருந்து தள்ளி வைக்கும்
மருத்துவ முறையாகும். இந்த மருத்துவத்தில் ஹார்மோன்கள் பணி செய்யும்
முறையை மாற்றும் மருந்துகள் பயன் படுத்தப்படும். இதில் பெண் ஹார்மோன்களை
உற்பத்தி செய்யும் கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவமும் அடங்கும். அது
உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாதலால் உடல் முழுதுமுள்ள புற்று
நோய் அணுக்களை பாதிக்கும்.
|