டாக்டர்:எதுக்குத்தான்
சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...
நண்பர்: ஏன்...?
டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே
சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.
JJJJJ
ஒருவர்: தொலைக் காட்சி
நிகழ்ச்சியிலே ஒரு டாக்டர் மருத்துவக் குறிப்பை எப்படி சொல்ல ஆரம்பிப்பார்?
மற்றவர்: அன்பார்ந்த நோயர்களே...
JJJJJ
டாக்டர்: இன்னும் நான்
உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...
JJJJJ
பெண்: என் கணவருக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
JJJJJ
வாலிபர்: மூன்று மாதமாக
எனக்கு கழுத்து வலி டாக்டர்...
டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச்
சொல்லுங்க...
JJJJJ
ஒருவர்: போலி டாக்டரிலே
இவர் ஒரு வித்தியாசமானவர்...
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க...?
ஒருவர்: எந்த வியாதியையும் இவர் குணப்படுத்தாமல் விட்டதில்லை...