மேலாளர்: என்னம்மா ...தப்புத்தப்பா
டைப் அடித்திருக்கிறாயே...
டைப்பிஸ்ட்: சாரி சார், பக்கத்திலிருந்தவர் கிச்சு கிச்சு மூட்டி
விட்டார்.
JJJJJ
மேலாளர்: இதுவரை நூறு
இன்டர்வியுவிற்குப் போயிருக்கேன்னு சொல்றீயே, ஏன் உனக்கு வேலை கிடைக்கலை?
வந்தவன்: எல்லோரும் மடத்தனமாக் கேள்வி கேட்கிறாங்க சார்.
JJJJJ
ஒருவர்: என்ன ஆபிஸ்ல
திடீரென்று போராட்டம் நடத்துறாங்க...?
மற்றவர்: கார், ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு வெகிக்கிள் அலவன்ஸ்
கொடுப்பது போல் நடந்து வருகிறவர்களுக்கு வாக்கிங் அலவன்ஸ் வழங்கனுமாம்...
JJJJJ
ஒருவர்: எங்க ஆபிஸ்ல
யாரும் தூங்காம இருக்க ஒரு வழி பண்ணிட்டேன்.
மற்றவர்: என்ன பண்ணுனீங்க...?
ஒருவர்: புதுசா ரெண்டு லேடி டைப்பிஸ்டுகளை வேலைக்குச் சேர்த்திருக்கிறேன்.
JJJJJ
ஒருவர்: இந்த ஆபிஸ்
ரொம்ப நேர்மையான ஆபிஸ்ங்க...
மற்றவர்: யாருமே லஞ்சம் வாங்க மாட்டார்களா...?
ஒருவர்: வாங்குவாங்க...அவங்க போட்டிருக்கிற லிஸ்ட்படிதான் வாங்குவாங்க...
JJJJJ
மேலாளர்: ஆறு
மாதத்திற்கு முன்னாலே தான் உங்க பெண் கல்யாணமுன்னு கடன் வாங்கினீங்க... இப்போ
மறுபடியும் கடன் கேட்கிறீங்களே... உங்களுக்கு இரண்டு பெண்ணா...?
ஊழியர்: இல்லைங்க... ஒரு பெண் தான். அவளோட கணவரை விவாகரத்து பண்ணிட்டு
வேற கல்யாணம் பண்ணப் போறா சார்...