ஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன
இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
மற்றவன்: பெண் அவ்வளவு அழகா?
ஒருவன்: இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா...
JJJJJ
தரகர்: பொண்ணு சிரிச்சா
கன்னத்துல குழி விழும்...
பையனின் தந்தை: பொண்ணுக்கு பல் இல்லைங்கிறதை நாசூக்கா சொல்றீங்களா...?
JJJJJ
ஒருத்தி: இலவசம் என்றால்
என் கணவர் எதையும் விட மாட்டார்...
மற்றொருத்தி: அப்படியா?
ஒருத்தி: ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு
வந்திருக்கிறார்...
JJJJJ
ஒருவர்: கலப்புத்
திருமணம் செய்தால் அரசாங்க உதவிகள் கிடைக்குமின்னு சொன்னாங்க... ஆனால் நீங்க
அரெஸ்ட் செய்ய வர்றீங்களே...
போலீஸ்: அதுக்காக ஒவ்வொரு ஜாதியிலேயும் ஒரு பெண்ணைக் கல்யாணம்
செய்துக்கச் சொல்லியிருக்கா...
JJJJJ
ஒருவர்: கல்யாணப்
பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...?
மற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க
இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்...