திருடன்-1:
ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...!
திருடன்-2:
இதிலென்னடா அவமானம்...?
திருடன்-1:
அவ என் மனைவிடா....
JJJJJ
திருடன்:
ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட
மனிதாபிமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்:
என்னப்பா சொல்றே?
திருடன்:
போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்.
JJJJJ
வீட்டுக்காரர்:
என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?
திருடன்:
என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு
கேட்கிறேன்.
JJJJJ
ஒருவர்:
ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே
வெட்கமாயில்ல...
திருடன்: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...
JJJJJ
நீதிபதி:
ஏம்பா போலீஸ் ஸ்டேசனிலேயே திருட ஆரம்பித்திருக்கிறாயே...
திருடன்: எனக்கு ஏரியாவே பிரித்துக் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க சார்.. நான் என்ன பண்றது...?
JJJJJ
வீட்டுக்காரர்:
என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற
கேட்கிறீயே..
திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...
JJJJJ
திருடன்-1: நேற்று நான் திருட போன கம்பெனி முகமூடி தயாரிக்கிற கம்பெனியாம்...
திருடன்-2: அப்புறம் என்ன செய்தாய்?
திருடன்-1:
பத்து முகமூடி திருடிட்டு வந்தேன்.
JJJJJ
போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததற்கு உங்க பொண்ணும் உடந்தையா
இருந்திருக்கிறாங்களே...
வீட்டுக்காரர்: ஆமாங்கய்யா... அவளோட உள்ளத்தை
யும் திருடன் திருடிட்டுப் போயிட்டான்.