போலீஸ்:
காணாமல் போன உங்கள் வேலைக்காரியோட அடையாளம் சொல்ல முடியுமா?
வீட்டுக்காரர்:
மார்பில் ஒரு மச்சம் இருக்கும் சார்.
JJJJJ
வந்தவர்:
என் வீட்டில் நடந்த நாலாவது திருட்டு சார் இது...
போலீஸ்: ஏன் எங்களிடம் கம்ப்ளைண்ட் கொடுக்கல...?
வந்தவர்:
மாமூலா உஙகளுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன் சார்...
JJJJJ
போலீஸ்:
உங்க வீட்டில திருடின திருடனை அடையாளம் சொல்ல முடியுமா ?
வந்தவர்:
வயது 32 மாநிறம் 165 செ.மீ உயரம் திருடின அன்று நீல நிற சட்டையும் பேண்ட்டும்
அணிந்திருந்தான்...
JJJJJ
திருடன:
சார் அந்த கோடி வீட்டு குப்புசாமியைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள்...
போலீஸ்:
ஏம்ப்பா...?
திருடன்:
அவர் வீட்டில திருடும் போது ரொம்பத் தொந்தரவு கொடுக்கிறார்..
JJJJJ
போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததும் ஏன் எங்களுக்கு
போன் செய்யலை...?
வந்தவர்:
போனையும் திருடிட்டுப் போயிட்டான் சார்...
JJJJJ
ஒருவர்:
சார்... நாலு திருடர்கள் மடக்கி என்னிடம் இருந்த ஒரு லட்ச ரூபாயைப் பிடுங்கிக்
கொண்டார்கள்.
போலீஸ்:
அதிலே உயரமா கருப்பாக் கண்ணாடி அணிந்தவன் இருந்தானா...?
ஒருவர்: ஆமாம் சார்...
போலீஸ்:
அப்போ பணம் கிடைக்காது போங்க...
JJJJJ
போலீஸ்:
என்னய்யா இது அநியாயம்... சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே...
வந்தவர்: என் மாமனாரும் மாமியாரும் வந்து ஆறு மாதம் ஆகிறது... வேறு என்ன செய்ய...?