தொண்டர் 1: கட்சியிலே சேர்ந்தா
தலைவர் சில சலுகைகள் தருவதா சொன்னாரே... என்ன சலுகைகள் தரப் போகிறார்?
தொண்டர் 2: சின்ன வீடு வைத்துக்
கொள்ள அனுமதி தரப் போகிறாராம்...
JJJJJ
ஒருவர்:
தலைவருக்கு இருந்தாலும் நம்ம மேலே இவ்வளவு அவநம்பிக்கை கூடாது...
மற்றவர்: என்ன பண்ணினார்...?
ஒருவர்:
பத்தாயிரம் பணமுடிப்பு தந்தோம்.அங்கேயே அவிழ்த்துக் கொட்டி எண்ணிக் கொண்டு
இருக்கிறார்.
JJJJJ
ஒருவர்: தலைவருக்கு பட்டம் கொடுக்கப் போறாங்களாமே...என்ன
பட்டம்...?
மற்றவர்:
ஆயிரம் சம்மன் வாங்கிய அபூர்வ தலைவர்...ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்க...
JJJJJ
ஒருவர்:
தலைவரை மட்டும் விட்டு விட்டு ஏன் எல்லோரும் வேறு கட்சிக்குப் போய் விட்டீர்கள்...?
மற்றவர்: தலைவர் எங்களை விட்டுவிட்டு வேறு கட்சிக்குப் போக இருந்தார்...அதனால்தான்...
JJJJJ
ஒருவர்:
தலைவர் மேடையிலே பேசும் போது திடீர்னு உளற ஆரம்பித்து விட்டாரே...
மற்றவர்:
யாரோ , சோடாவிலே சாராயத்தைக் கலந்து கொடுத்து விட்டார்களாம்...
JJJJJ
ஒருவர்:மறைந்த
தலைவருக்கு கட்சிக்காரர்கள் சென்ற ஆண்டுதானே நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள்.
இந்த ஆண்டும் கொண்டாடுகிறார்களே...
மற்றவர்: இவர்கள் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த எதிரிக் கட்சியினர்.
JJJJJ
தொண்டர் 1:
கட்சியிலே நான் அடிமட்டத் தொண்டனா இருந்தேன்...
தொண்டர் 2: இப்ப...?
தொண்டர் 1:
அடிபட்ட தொண்டனா இருக்கிறேன்.
JJJJJ
தலைவர்:
மக்களுடைய குறைகளைக் கேட்டால்தான் எனக்கு தூக்கம் வரும்...
நண்பர்:
உடனே தீர்த்து வைத்து விடுவீர்களா...?
தலைவர்:
இல்ல நான் குறையில்லாமல் இருக்கேன்கிற சந்தோஷத்துல தூங்கிவிடுவேன்.
JJJJJ
ஒருவர்:
என்னது தலைவர் உங்க குழந்தைக்கு ‘சனியன்’ னு பேர் வைத்து விட்டாரே...?
மற்றவர்:
ஆமாங்க... மணியன்னு பேர்வைக்க இருந்த சமயத்திலே சம்மனைக் கொண்டு வந்து
கொடுக்கவும் சனியன்னு வச்சிட்டார்