டாக்டர்:
என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில
நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
வந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன்
சாப்பிடச் சொன்னீங்க...
JJJJJ
சர்வர்:
சார்...என்ன சாப்பிடுறீங்க?
சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும்
ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...
சர்வர்: ?.....!.....?.
JJJJJ
ஒருத்தி:
ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...
மற்றவள்: நீயே
சமைத்து விடுவாயா..?
ஒருத்தி: இல்ல...டைனிங்
ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.
JJJJJ
டைப்பிஸ்ட்:
ஏன்
சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?
மானேஜர்:
உனக்கு எப்படிம்மா தெரியும்..?
டைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...
JJJJJ
ஒருவர்: என்னப்பா
இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?
சர்வர்: சொட்டு
நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...
JJJJJ
ஒருவர்: பாதிப்பேர்
பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?
மற்றவர்:
ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...
JJJJJ
ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா
இருக்காரா..?
மற்றவன்: இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...