நேரம் வீணாவதில்லை...
ஒரு முறை பெர்னாட்ஷாவிடம் அவர்
நண்பர் பெர்னாட்ஷாவிற்கு காது கேட்காது என்பதைத் தெரிந்து கொண்டு , "நீங்கள்
காதில் இயர்போன் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?" என்றார்.
உடனே பெர்னாட்ஷா , "உங்களைப் போன்றவர்கள் என்னிடம் அதிகம் சத்தம் போட்டு பேச
முடியாது. மேலும் நீங்கள் பேசினாலும் அதிக நேரம் பேச முடியாது. உங்களைப்
போன்றவர்கள் அரட்டை அடிக்கவும் முடியாது. இதனால் எனது நேரமும் வீணாவதில்லை..."
என்றார்.
JJJJJ
பகலில் காண
முடியாததை...
பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்ஸாக்
வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தான்.
தூக்கம் வராமல் புரண்டு படுத்த அவர் இதைக் கண்டு பலமாகச் சிரித்தார்.
"எதற்கு சிரிக்கிறாய்?" என்றான் திருடன்.
" நான் பகலில் காண முடியாத பணத்தை நீ இரவில் கண்டு விடாலாமென்று நினைத்து
இவ்வளவு சிரமப்படுகிறாயே... அதை நினைத்துத்தான் சிரித்தேன்." என்றார்.