ஒருவர்:
அந்த தொலைக்காட்சி நடத்தின பொங்கல் பரிசுப்
போட்டியிலே வெற்றி பெற்ற உனக்கு என்ன பரிசு கொடுத்தாங்க?
மற்றவர்: வேறென்ன, பொங்கல்தான்!
JJJJJ
ஒருவர்: பொங்கலுக்கு கிப்ட் பாக்ஸா? அப்படி என்னதான்
இருக்கு அதில்...?
மற்றவர்: உள்ளே பொங்கல் பாக்கெட், கரும்புத் துண்டு,
தேங்காய், பழம்னு போட்டு பாக்கெட் பண்ணியிருக்காங்க.
JJJJJ
மாப்பிள்ளை: பொங்கலுக்கு மறுநாள் மஞ்சு விரட்டுதானே, நீங்க
புதுசா மாப்பிள்ளை விரட்டுன்னு சொல்றீங்களே...?
மாமா:
பொங்கலுக்கு வந்த மாப்பிள்ளையை மறுநாளே விரட்டிடனும்னு புதுசா ஒரு விழா கொண்டு
வந்திருக்கோம்...!
JJJJJ
ஒருவர்: பொங்கல் நாளில் சர்க்கரைப் பொங்கல்,
கரும்புன்னு ஒரே இனிப்பா இருக்கிறது நல்ல விஷயம்தானே, இதை மாற்றனும்னு சொல்லிப்
போராட்டம் செய்றாங்களே... யாரு அவங்க...?
மற்றவர்: சர்க்கரை வியாதிக்காரர்கள்.
JJJJJ
ஒருவர்:
உங்க பெண்ணும், மாப்பிளையும் பொங்கலுக்கு
வந்திருக்காங்களா?
மற்றவர்: அட நீங்க வேற, அவங்க தீபாவளிக்கு வந்தவங்க
இன்னும் போகாம இங்கேயே தங்கிக்கிட்டிருக்காங்க...