ஆசிரியர்
:
உங்க பையனோட கையெழுத்தைப் பார்த்தால் இன்னிக்கு பூரா பார்த்துக்கிட்டே
இருக்கலாம் சார்!
மாணவனின் தந்தை: அட! அப்படி மணி மணியா எழுதறானா?
ஆசிரியர்
:
பார்த்துக்கிட்டே இருக்கலாம்னுதான் நான் சொன்னேன்...! எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கமுடியும்...!
JJJJJ
ஒருவர்:
நேத்துதான் யாருக்கோ பாராட்டுக் கூட்டம் நடத்துனீங்களே... இன்னிக்கு
திடீர்னு யாருக்கு அஞ்சலிக் கூட்டம் சார்?
மற்றவர்: அவருக்கேதான் சார்...!
நேத்து எல்லாரும் ஓவரா பாராட்டுனதுல, அட்டாக் வந்து செத்துட்டாருங்க அவரு...!
JJJJJ
ஒருவர்:
போலி டாக்டர்னுதான்
கேள்விப்பட்டிருக்கேன்...அதென்ன போலி பேஷண்ட்...?
மற்றவர்: இந்த டாக்டர், தன் க்ளினிக்ல
கூட்டம் காட்டுறதுக்காக, காசு குடுத்து ஆளுங்களைப் பிடிச்சு, பேஷண்ட் மாதிரி
உக்கார வச்சிடுறாருங்க!
JJJJJ
ஒருவர்: திருட்டுத்
தொழில் பண்ணிக்கிட்டிருந்த உன் அப்பன் இப்ப என்னடா பண்றான்?
மற்றவர்: வயசாயிடுச்சுல்ல ஐயா...இப்ப பக்தி மார்க்கத்துல
போய்க்கிட்டுருக்காருங்க!
ஒருவர்: பரவாயில்லையே...தன்னோட தவறை உணர்ந்து கோயில், குளம்னு சுத்த
ஆரம்பிச் சுட்டானே?
மற்றவர்: அட நீங்க வேற, அது மாதிரியான இடங்களில மட்டும்தான் இப்போ
திருடுறாரு...!